சீரற்ற காலநிலை காரணமாக இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையேயான படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை முன்னறிவிப்புகளை கருதிற்கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து படகு பயணங்களையும் இரத்துச் செய்துள்ளதாக படகு சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் படகுகளை உலர்த்தவும், புதுச்சேரியில் வழமையான படகு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் குறித்த காலப்பகுதியை பயன்படுத்தவுள்ளதாகவும் படகு சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
படகின் ஆசனங்களின் எண்ணிக்கையை 150 இலிருந்து 186 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் படகு நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
மீள படகு சேவை ஆரம்பிக்கப்படும் போது சிறந்த வினைத்திறனான சேவை முன்னெடுக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,









