மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்கள் சந்திப்பை மேற்கொள்ள பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய வவுனியாவிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா – மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்பு கொட்டுவ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் மாதத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து பொது மக்கள் தமது பிரச்சனைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









