6 து பருவகால லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
டி 20 போட்டிகளாக வழமைபோன்று நடைபெறும் தொடரில் இம்முறை 24 போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் 20 போட்டிகளும் லீக் போட்டிகளாக நடைபெற்று எஞ்சிய போட்டிகளில் தோல்வியடையும் அணி வெளியேறும் வகையில் தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடரில் இணையவுள்ள இந்திய அணி வீரர்களின் பெயர் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென லங்கா பிரிமியர் லீக் நிர்வாகம் அறிவித்துள்ளது.









