ஹட்டன் ஹைலன்ட்ஸ் மத்திய கல்லூரியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பொது அறிவு மற்றும் நுண்ணறிவு (School IQ Master Competition) போட்டியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முதலிடத்தை பெற்றுக்கொண்டது
2ம் இடத்தை ஹட்டன் செனன் தமிழ் மாகா வித்தியாலயமும் , 3ம் இடத்தை ஹட்டன் பொஸ்கோ கல்லூரியும் பெற்றுக்கொண்டன.
IQ Master Award தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவி அசுதாஸன் லக்சிக்காவுக்கு வழங்கப்பட்டது.
ஹட்டன் கல்வி வலயம் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்குக்கிடையிலான போட்டி நிகழ்ச்சிகள் ஹட்டன் ஹைலன்ட்ஸ் மத்திய கல்லூரியில் நடைப்பெற்றன.
இந்நிலையில் போட்டியில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர் சார்ல்ஸ், போட்டி நிகழ்ச்சிக்கு இணைப்பாளராக செயற்பட்ட உப அதிபர் ஜெகதீசன் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபர் திருமதி ரோஹினி, பிரதி அதிபர்கள், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.









