2025 உலகளாவிய சிறந்த ஜனநாயக நாடுகள் குறியீட்டில் (Global Democracy Index) இலங்கை கடந்த வருடத்தை விடவும் 15 இடங்கள் முன்னேறியுள்ளது.
நாட்டின் புதிய அரசாங்கம், கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் உள்ளிட்ட பல விடயங்கள் ஜனநாயக குறிகாட்டியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமைக்கு காரணமாகும்.
எவ்வாறெனினும் முன்னேற்றத்திற்கான அடிப்படைகளுடன், சவால்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சங்கங்களை அமைத்தல் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் தொடர்பான உரிமைகள் குறைவடைந்து வருவதாக ஸ்டொக்ஹோமை தளமாகக் கொண்ட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.









