Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் ஜிம் லவெல் காலமானார்

ஆவணி 9, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் ஜிம் லவெல் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான ஸ்மிலின் ஜிம் லவெல் தனது 97 ஆவது வயதில் காலமானார்.
நாசா விண்வெளி மையத்தின் சிரேஷ்ட விண்வெளி வீரரான அவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியில் வீட்டில் இருந்தபோது காலமானார்.

1968-ம் ஆண்டு விண்வெளி பயணம் மேற்கொண்ட அப்பல்லோ 8 விண்கல பயணத்தில் ஜிம் தலைமையில் நாசா வீரர்கள் பிராங்க் போர்மன் 2 மற்றும் வில்லியம் ஆண்டர்ஸ் ஆகியோர் சென்றனர்.
புவியின் ஈர்ப்பு விசையை கடந்து, மனிதர்கள் முதன்முறையாக விண்வெளிக்கு மேற்கொண்ட பயணம் என்ற வகையில் அது வரலாறு படைத்தது. வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்கு முன் 10 முறை நிலவை சுற்றி வந்தனர்.
இந்த பயணத்தில் உயிருடன் இருந்த கடைசி நபராக லவெல் அறியப்பட்டார். இந்நிலையில் அவர் வயது முதிர்வால் காலமானார்.
1970-ம் ஆண்டு நிலவில் தரையிறங்கும் பயணத்தின்போது அப்பல்லோ 13 விண்கலத்தின் ஆக்சிஜன் தொட்டி திடீரென விண்வெளியில் வெடித்தது.

இதனால் விண்கலத்தில் இருந்த அனைவரும் ஆபத்தில் தள்ளப்பட்டனர்.
அதில் பயணித்த ஜிம் லவெல் மற்றும் அவருடைய இரு சக வீரர்களான ஜான் ஸ்விகெர்ட் ஜூனியர் மற்றும் பிரெட் ஹெய்ஸ் ஜூனியர் ஆகியோர் உயிருடன் பூமிக்கு திரும்புவார்களா? என்பதில் சந்தேகம் எழுந்தது.
ஆனால் கடும் நெருக்கடிக்கு இடையிலும் அமைதியான முறையில் செயல்பட்டு அந்த விண்கலம் பூமிக்கு திரும்புவதற்கு கமாண்டர் என்ற அளவில் உதவி புரிந்த ஜிம்முக்கு பாராட்டுகள் குவிந்தன.

அதுவே அவருடைய கடைசி விண்வெளி பயணம் ஆகும்.

நான்கு முறை அவர் விண்வெளி பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

அவருடைய மறைவுக்கு நாசா விண்வெளி மையம் வருத்தம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை

அடுத்த செய்தி

வாகன பதிவில் விருப்பமான எண்களைப் பெற்றுக்கொள்ள

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
வாகன பதிவில் விருப்பமான எண்களைப் பெற்றுக்கொள்ள

வாகன பதிவில் விருப்பமான எண்களைப் பெற்றுக்கொள்ள

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.