கொழும்பின் பிரம்மாண்டமான சிட்டி ஒப் ட்ரீம்ஸ் ரெஸோட்டின் திறப்பு விழாவில் ஷாருக்கான் கலந்துகொள்வது சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.
எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால் ஷாருக்கான் நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டாரென அவரது விஸ்கிராப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிட்டி ஒப் ட்ரீம்ஸ் சொகுசு விருந்தகத்தின் திறப்புவிழா நிகழ்வில் ஷாருக்கான் முக்கிய விருந்தினராக கலந்துகொள்வாரென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளமைக்கு ஷாலுக்கான் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் எப்போதும் அவருக்கு பிரியமானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளதோடு ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
எவ்வாறெனினும் சிட்டி ஒப் ட்ரீம்ஸ் ரெஸோட்டின் திறப்புவிழா நிகழ்வு பிரமாண்டமாக இருக்குமென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி திறப்பு விழா நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








