நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது புஹாரி நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 82வது வயதில் லண்டனில் காலமானார். 2015ம் ஆண்டின் பின்னர் நைஜீரியாவின் நவீன சகாப்தத்தில், தேர்தலில் போட்டியிட்ட புஹாரி வெற்றிபெற்றார்.
ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரலான புஹாரி, 1980 களில் ஒரு இராணுவ சதியில் ஆட்சியைப் பிடித்த பிறகு நைஜீரியாவை முதன்முதலில் ஆட்சி செய்தார். பின்னர் அவர் தன்னை ஒரு சிவிலியன் அரசியல்வாதியாக மறு பெயரிட்டுக் கொண்டார், “மாற்றப்பட்ட ஜனநாயகவாதி” என்று அறிவித்துக்கொண்டார். ஊழலுக்கு எதிரான அவரது கடுமையான செயற்பாடு மற்றும் தீவிரமான சொல்லாட்சிக்காக அறியப்பட்ட புஹாரி, அவரது ஆதரவாளர்களால் ஒரு சீர்திருத்தவாதியாகக் போற்றப்பட்டார்.
அனைவருக்கும் சொந்தமானவன் நான், நான் யாருக்கும் சொந்தமானவன் அல்ல என்று அவர் அடிக்கடி அறிவித்தார் நைஜீரியாவின் வேரூன்றிய அரசியல் பிரிவுகளுக்கு மேலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்தார்.
நாட்டின் ஜனநாயக பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய நபராக நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது புஹாரி கூறப்பட்டபோதும் பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நடைமுறைகளை பொறுத்தவரை குறைபாடுள்ள தலைவராக அவர் நினைவுகூறப்படுகிறார்.
நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது புஹாரியின் மறைவு குறித்து நைஜீரிய தற்போதைய ஜனாதிபதி போலா அஹமட் டினூபு உறுதிபடுத்திள்ளார்.









