கடந்த ஜூன் 15ம் திகதி தெஹ்ரானில் நடைபெற்ற உயர் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் காயமடைந்ததாக ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியாக அரசாங்கத்தின் மூன்று முக்கிய பிரிவுகளின் தலைவர்களை இலக்காக கொண்டு குறித்த கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய அதிகாரியை மேற்கோள் காட்டி அல்ஜசீரா செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் ஆறு ஏவுகனை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதனையடுத்து கூட்டம் இடம்பெற்ற கட்டிடத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரி வேறு வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்போதே ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனின் காலில் சிறிய அளசிலான காயம் ஏற்கபட்டதாகவும் ஈரானிய சிரேஸ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.









