இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. வேகமாக துடுப்பெடுத்தாடிய குசல் மென்டிஸ் 114 பந்துகளில் 125 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து தனது ஆறாவது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்தார். அணித்தலைவர் ச்ரித் அசலங்க 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து, தனது பங்களிப்பை வழங்கினார். பங்களாதேஸ் அணியின் பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் மற்றும் மெஹிடி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.
286 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 39.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து, 186 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது. தௌஹித் ரிடோய் 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
அசித பெர்ணாண்டோ, துஸ்மந்த ச்மீரா ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் தலா 3 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் குசல் மென்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.









