ஜப்பானின் தென்மேற்கு பகுதிலுள்ள கியூஷுவில் இன்று (13) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னிடியூடாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து தற்காலிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கரையோர பகுதிகளிலுள்ள மக்கள் பதுகாப்பான இடங்களுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் 6.9 மெக்னிடியூடாக மதிப்பிடப்பட்டு பின்னர் அது 6.7 மெக்னிடியூடாக அறிவிக்கப்பட்டது. சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குள் 3.2 அடி உயரத்தில் சுனாமி ஏற்பட்டதாகவும் மியாசாகி துறைமுகத்தில் நீர் 8 அங்குல உயர்ந்தாகவும் ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.









