தைப்பொங்கல் தினமான நாளை சிறைச்சாலைகளிலுள்ள இந்து மத கைதிகளுக்கு உறவினர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளளது.
சிறைக்கைதிகளின் மன நலன்கருதி இந்த விசேட வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளையதினம் இந்து கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவு மற்றும் இனிப்புகளைக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் வௌிநபர்களை சந்திப்பதற்கான நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைச்சாலை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.









