லங்கா சதொச ஊடாக 3 தேங்காய் மற்றும் 5 கிலோ அளவிலான நாட்டரிசியை நுகர்வோருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.
தேங்காய் 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தேங்காய் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசி தொகையை சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒருவருக்கு 3 தேங்காய் மற்றும் 5 கிலோ அரிசியை கொள்வனவு செய்து கொள்ள முடியும்.
ஏற்கனவே சதொச ஊடாக 220 ரூபாவுக்கு நாட்டரிசி விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதிகளவானோர் அதனை கொள்வனவு செய்து, வெளியில் 240 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனை கருத்திற்கொண்டே ஒருவருக்கு 5 கிலோ நாட்டரிசியை மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.









