முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவித்து மீள ஒப்படைக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதி மக்கள் அதுதொடர்பில் பிரதமரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் போதே மனு கையளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காணிகளை விடுவித்துத் தருமாறு வட மாகாண ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடம் கடந்த மாதம் மனுவொன்று வழங்கப்பட்டதாகவும் மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் குறிப்பிட்டுள்ளனர்.









