ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் மொஹமட் அக்லக் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க மற்றும் தனஞ்சய லக்ஷான் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
அதனையடுத்து 73 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக சந்துன் வீரக்கொடி 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
குறித்த வெற்றியின் ஊடாக 2024 ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை இலங்கை அணி 17 வருடங்களுக்கு பின்னர் வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









