மன்னார் அரிப்பு பண்டாரவெளி கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில் இரவு வேளையில் கடல் அட்டை பிடித்த 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்போது ஒரு டிங்கி படகும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 227 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத்துறை அரிப்பு மற்றும் நானாட்டான் பிரதேசங்களைச் சேர்ந்த 22 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்களென தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் , கடல் அட்டை மற்றும் டிங்கி படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.









