வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
நேற்றைய தினம் நல்லூர் கந்தனின் 20 ஆம் நாள் திருவிழாவான கைலாச வாகன உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து கைலாச வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வலம் வந்தார் இதன் போது அலங்கார கந்தனாம் நல்லூரானின் அருளை பெற பெருமளவு பத்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் முதலாம் திகதி நல்லூரானின் தேர்திருவிழா இடம்பெறவுள்ளது.
செப்டெம்பர் 2 ஆம் திகதி நலூர் கந்தனின் தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது.









