ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகின்றனர்.
தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி.., வெற்றிபெறும் தாய்நாடு, ஒன்றிணைந்த இலங்கை” ஆகிய 05 பிரதான கூறுக ள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
“இயலும் ஸ்ரீ லங்கா” எனும் பெயரில் இந்தக் கொள்கை வெளியீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை சுமையை குறைத்தல்
புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் அதிக சம்பளம்
வரிச்சுமையை குறைத்தல்
பொருளாதாரத்திற்கான திட்டம்
உறுமய மற்றும் அஸ்வெசும திட்டங்கள்
ஜனாதிபதித் தேர்தல், இலங்கைக்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கு அல்லது குழப்பம் மற்றும் நிலைக்குத் திரும்புவதற்கு இடையிலான தெரிவாகும். இலங்கையர்கள் சிரமங்களை எதிர்கொள்வதை நான் அறிவேன். ஆனால் இந்த பயணத்தில் நாம் நீண்ட தூரத்தை கடந்திருக்கிறோம்.
2022 நெருக்கடிக்குப் பிறகு நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம். இந்த பயணத்தின் அடுத்த 5 வருடத்திற்கான திட்டம் என்னிடம் மட்டுமே உள்ளது.
உங்கள் வாக்கு மூலம் ஒருங்கிணைந்த இலங்கையை பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு கொண்டு செல்வேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கண்டியில் குயின்ஸ் ஹோட்டலில் வெளியிடப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதலில் மாநாயக்க தேரர்களிடம் கையளித்து ஆசி பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் கடந்த திங்கட்கிழமை அக்கட்சியின் வேட்பாளர் அநுர குமார திசநாயக்கவினால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது









