அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததோடு , கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் தலைமையின் தீர்மானத்துக்கமைய, இறுதி தீர்மானம் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன்
ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.









