சிம்பாபே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஹராரேயில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கிளைவ் மட்டன்டே(Clive Madande) 29 ஓட்டங்களையும் டிஒன் மேயர்ஸ் (Dion Myers ) 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்களாக 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வொஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் கைப்பற்றினார்.
116 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது. சுப்மன் கில் அதிகபட்சமாக 31 ஓட்டங்களையும் வொஷிங்டன் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
13 ரன்கள் வித்தியாசத்தில் சிம்பாபே அணி வெற்றிப்பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. சிம்பாபே அணியின் சிக்கந்தர் ராசா போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். அவர் பந்து வீச்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.








