வாழ்வில் சாதிக்கத்துடிக்கும் ஒவ்வொருவரும், தமக்கேயுரிய தனித்துவமான பாணிகளால் வெளியுலகிற்கு தமது முகத்தை விரைவில் அறிமுகப்படுத்திவிடுகின்றனர்.
அப்படி நாம் வியந்த தனித்தவ படைப்பாற்றலைக் கொண்ட பெண்மணிதான் முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த நிதுஷா கிருஷாந்த். இவரொரு பல்கலைக்கழக மாணவி.
கற்றல் செயற்பாடுகளின்போது களிமண் தொடர்பில் உரிய அறிவைப் பெற்றுக்கொண்டதோடு, இணையவழி கற்றல் செயற்பாடுகளினூடாக களிமண் ஆபரணங்களை உருவாக்குவது தொடர்பான அறிவைப் பெற்றுள்ளார்.
தற்போது களிமண்ணைப் பயன்படுத்தி பல்வேறு விதமான உயர்தர ஆபரணங்களை தயாரித்து, அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி வருகிறார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தங்க ஆபரணங்களை வாங்குவது, உண்மையில் அனைவருக்கும் இயலாத ஒன்றாகும்.
ஆனாலும் பெண்களின் ஆபரண கனவை இல்லாமலாக்க முடியுமா? அவர்களுக்காகவே இந்த களிமண் ஆபரணங்கள்.









