பிரேசிலில் பெய்துவரும் பலத்த மழையால் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காணாமல் போயுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்குமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரேசிலின் தெற்கு ரியோ கிரேண்டே டோ சுல் மாநிலம் சீரற்ற வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. உருகுவே – ஆர்ஜென்டீனா எல்லையை அண்மித்த 497 நகரங்களில் புயல் தாக்கத்தினால் 68 பேர் காணாமல் போயுள்ளனர். 24,000 ற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.









