99ஆவது Academy Awards (Oscars 2027) விழாவின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் (International Feature Film) பிரிவில் போட்டியிடுவதற்காக, இயக்குநர் லலித் ரத்நாயக்காவின் ‘Riverstone’ திரைப்படம் இலங்கையின் உத்தியோகபூர்வ திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் National Oscars Selection Committee மேற்பார்வையில் புதிதாக ஒழுங்குபடுத்தப்பட்ட தேசியத் தெரிவு நடைமுறையின் மூலம் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
ஆறு திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு திரைப்படங்கள் மட்டுமே Academy-யின் தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்திருந்தன.
இறுதிச் சுற்றில் ‘Riverstone’ மற்றும் ‘Father’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு, இலங்கையின் உத்தியோகபூர்வ பதிவாக ‘Riverstone’ தெரிவாகியுள்ளது.








