திருமணங்கள், தனியார் விருந்துகள் மற்றும் டிஜே நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமம் பெறும் நடைமுறையை, இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கமான ACPOSL தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இந்த நடைமுறை தொடருமா என்பது குறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
உரிம நடைமுறையில் நிரந்தர மாற்றம் செய்வதற்கு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரின் அனுமதி தேவை என சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, வீடுகளில் தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு இசை உரிம நடைமுறை பொருந்தாது என்றும் இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.








