இலங்கை கடற்படையினர் வடக்குக் கடற்கரையில் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் 81 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் இன்று (27) காலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட சோததனை நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட சுமார் 81 கிலோகிராம் போதைப்பொருள் தொடர்பாக, யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நிபுணத்துவப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 45.5கி.கி. ஐஸ் மற்றும் 35.7 ஹெரோயின் உள்ளிட்ட சுமார் 81 கிலோகிராம் போதைப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை அறிவித்துள்ளது.









