Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை மீளப் பெறுமாறு அரசாங்கத்திடம் கோரி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று பத்தரமுல்லை பொல்துவ சந்தியில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மழையுடனான காலநிலைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கணிசமான எண்ணிக்கையில்  கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக, முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று  பாராளுமன்றத்தில்  ஆரம்பமாகியுள்ளது.

இந்த விவாதம் நாளையும் தொடரவுள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், அரசியலமைப்புத் திருத்தமாக சட்டமூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் தேவையான விசேட பெரும்பான்மை போதுமானது என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இந்த சட்டமூலம் பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது உள்ளிட்ட சில நீதித்துறை சார்ந்த ஏற்பாடுகளில் மாற்றங்களை முன்மொழிகிறது.

இந்நிலையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற விவாதமும், அதற்கு எதிரான எதிர்க்கட்சியின் அரசியல் நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் இடம்பெற்று வருகின்றன.

முந்தைய செய்தி

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

அடுத்த செய்தி

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.