பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளவும், தங்களது வினவல்களை விரைவாக முன்வைக்கவும் பொலிஸ் தலைமையகம் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, 2026 செப்டம்பர் 23ஆம் திகதி முதல், பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவுடன் WhatsApp ஊடாக தொடர்புகொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
📱 புதிய WhatsApp இலக்கம்: 071 859 5950
இந்த இலக்கம் WhatsApp செய்திகள் பரிமாற்றத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்கள், தங்களது விண்ணப்பம் தொடர்பான தேவையான தகவல்களை WhatsApp செய்தி மூலம் அனுப்பி, குறித்த பிரிவுடன் தொடர்புகொண்டு தங்களது சந்தேகங்கள் மற்றும் வினவல்களை முன்வைக்க முடியும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, குடிவரவு, கல்வி மற்றும் ஏனைய தேவைகளுக்காக பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தேவைப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, இந்த புதிய தொடர்பாடல் வசதி விண்ணப்பம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதை மேலும் இலகுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் தகவல்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள், 071 859 5950 என்ற WhatsApp இலக்கத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
முக்கிய குறிப்பு: 071 859 5950 என்ற இலக்கம் WhatsApp செய்திகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.









