119வது தேசிய சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் திறந்த வெளியில் தமது உறவினர்களை சந்திப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சந்தர்ப்பமொன்றை வழங்கியுள்ளது.
அத்துடன் கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்படும் உணவு வகைகள் மற்றும் சுகாதார பொருட்களை கைதிகளுக்கு வழங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய காலை மாலை 4 மணி அதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
கைதிகளின் மனநிலையை சிறந்த முறையில் பேணுவதற்கும், நடத்தையில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் இதனூடாக வாய்ப்பு ஏற்படும்.
கைதிகளும் மனிதர்களே எனும் கோட்பாட்டுக்கமைய செயற்படும் சிறைச்சாலை திணைக்களம், கைதிகளின் நலன்தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இன்றைய தினம் கைதிகளை திறந்தவெளியில் தமது உறவினர்கள் பார்வையிட முடியும்.








