சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, அட்டன் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் கலந்துகொண்டனர்.
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தப்பட்டதுடன், சில பகுதிகளில் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், அனோஜனின் வழக்கு தொடர்பில் சவூதி அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









