முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ‘நீல அறிவித்தல்’ (Blue Notice) ஒன்றை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சர்வதேச பொலிஸாரிடம் (Interpol) கோரிக்கை விடுத்துள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ்ஹில் காணி கொள்வனவு மற்றும் ஊவா மாகாண சபை தேர்தல் காலத்தில் 7.8 மில்லியன் ரூபாய் செலவில் 12,000 டி-ஷர்ட்கள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்போல் மேலதிக தகவல்களை கோரியுள்ள நிலையில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.









