மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
திவுலப்பிட்டிய – படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் இன்று பிற்பகல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு யுவதி நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து, அவரைக் காப்பாற்ற முயன்ற மேலும் மூவரும் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன மூன்று யுவதிகளையும் இளைஞரையும் தேடும் பணிகள் பொலிஸாரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல் போனவர்கள் 20 முதல் 25 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









