நுவரெலியா – நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் நானுஓயாவைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளையைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன் நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா கிரிகோரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றுடன் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்றபோதே இருவரும் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









