இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான இவர், இலங்கை – அமெரிக்கா இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நலன்களை மேம்படுத்தவும் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது









