2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 தேர்வு மையங்களில் நேற்று இடம்பெற்றது.
இந்த பரீட்சையில் 94,089 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73, 723 பேர் தமிழ் மொழியிலும் பரீட்சை எழுதியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் பரீட்சை முடிவுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.








