நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், தொடர்ந்தும் நாடுமுழுவதும் சுத்தரிகரிப்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேல் மாகாணத்திலுள்ள 23 டெங்கு அதிஅவதான வலயங்களை உள்ளடக்கும் வகையில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
சுகாதாரப் பிரிவினர்இ முப்படைகள்இ பொலிஸார்இ மாவட்ட செயலகங்கள்இ பிரதேச செயலகங்கள்இ உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பல அரச மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத் தரப்பினரின் கூட்டுப் பங்களிப்புடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
டெங்கு ஒழிப்புக்காகப் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்குடன்இ மேல் மாகாணத்தின் 23 டெங்கு அதிஅவதான வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் இக்கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.









