2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 23 ம் திகதி வரை இணையவழி ஊடாகச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் அதிபர் மூலமாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உரிய அறிவுறுத்தல்களின்படி இணையவழியாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ அல்லது https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ ஆகியவற்றுக்கு பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.









