ஹட்டன் – டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் பீற்றர் போல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் கடந்த வியாழக்கிழமை ( 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் சிசிடிவி கமராக்களில் பதிவான காணொளிகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய முக்கிய சந்தேகநபர்இ பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில்இ கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பிஇ கூரிய ஆயுதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









