ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய இடைக்கால நிர்வாக குழுவின் தலைவராக எரான் விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக ரொஷான் மஹாநாம ,குமார சங்கக்கார, சிதத் வெத்தமுனி , துஷிர ரதல்ல,அவந்தி கொலம்பகே
, பிரகாஷ் ஷாப்டர் , உப்புல் குமாரப்பெரும, டினால் பிலிப்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு
1973ம் ஆண்டு 25ம் இலக்க விளையாட்டுத் துறை சட்டத்தின் 31ம் , 34 ம் சரத்துக்களின் கீழ் காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய குறித்ததீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததை அடுத்து குறித் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









