தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அன்பளிப்புக்களை பெற்றுக்கொள்ளல் மற்றும் புத்தாண்டு உபசரிப்புக்கான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொலிஸ்மா அதிபரால், அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் குறித்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
விசேடமாக, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் அன்பளிப்புப் பொதிகள் மற்றும் பரிசு வவுச்சர்களை வழங்கக்கூடாது எனவும், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அத்தகைய பொருட்களைப் பொறுப்பேற்கக் கூடாது எனவும் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
அத்துடன் வெளித்தரப்பினர் அல்லது வர்த்தக சமூகத்தின் பங்களிப்புடன் பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு விருந்துகளை நடத்தக்கூடாதெனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகத் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மேற்பார்வை அதிகாரிகளுக்குப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.









