லெபனானை இலக்காக கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 250 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்த தினத்திலிருந்து ஒரே நாளில் அதிகளவானோர் பலியான சம்பவம் நேற்றைய நாளிலேயே பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் பல இடங்கள் தாக்குதல் காரணமாக அழிவடைந்துள்ளதாகவும், இது யுத்த நிறுத்த மீறல் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதேவேளை லெபனான் மீதான தாக்குதல்கள் , யுத்த நிறுத்த உடன்படிக்கைகளுக்கு உட்பட்டது அல்ல என இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









