T– 20 உலகக்கிண்ண தொடர் 2 ஆவது அரையிறுதி போட்டி இன்றைய தினம் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. நேற்றைய முதலாவது அரையிறுதி போட்டியில் 9 விக்கட்டுகளினால் தென்னாபிரிக்க அணியை வெற்றிகொண்ட நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் நடப்பு செம்பியனான இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் இன்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. நடப்பு செம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வி காணப்படுகிறது. ஏற்கனவே 2007, 2014, 2024 ம் ஆண்டுகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இங்கிலாந்து அணியும் சிறந்த துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ள நிலையில், இன்றைய போட்டி இருநாட்டு ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை வழங்குமென்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.









