ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன கட்சியலிருந்து பிரிந்த உதய கம்மன்பில, விமல வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் இணைந்த புதிய கூட்டணி கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சிலவும் ஒன்றிணைந்து கூட்டணியை அமைத்துள்ளன.
‘சர்வ ஜன பலய’ என்ற பெயரிலேயே புதிய அரசியல் கூட்டணி இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
‘ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாடு – மகிழ்ச்சி நிறைந்;த நாடு’ என்ற தொனிப்பொருளின் கீழ்
கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது
பிவித்துறு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, மவ்பிம ஜனதா கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மேலும் சில அரசியல் கட்சிகள் குறித்த கூட்டணியுடன் இணைந்துள்ளன.
கூட்டணிக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இன்று (27) இடம்பெற்றது









