நிலவும் சீரற்ற காலநிலையினால் கம்பளை குறுந்துவத்த, கங்கஇஹலகோரள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை, ராக்சாவ தோட்டத்திலுள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
பலத்த காற்றினால் கூரை தகடுகள் துக்கியெறியப்பட்ட நிலையில் 25 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது பரணகலை தமிழ் வித்தியாலய பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்புகளின் கூரை தகடுகள் காற்றில் அள்ளுண்டு செனறமையினால் வீடுகளில் காணப்பட்ட பொருட்கள் அனைத்தும் மழை நீரில் நனைந்து அழிவடைந்துள்ளன.வீடுகளுக்கும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது.
செய்தியாளர்- சிவயோகன்









