2024ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஒன்லைன் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
இன்றுமுதல் எதிர்வரும் ஜூன் மாதம் 14 ம் திகதி வரை ஒன்லைன் முறையின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஜூன் 14ம் திகதி நள்ளிரவு 12 மணியின் பின்னர் ஒன்லைன் முறையூடான விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்படுமெனவும், அதன்பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
5 ம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.









