பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட நெத்மி கிம்ஹானி வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார்.
இம்முறை ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வெற்றிகொண்ட முதல் பதக்கம் இதுவாகும்.
நெத்மி கிம்ஹானி 4 நிமிடங்கள் 52.32 வினாடிகளில் போட்டியை நிறைவுசெய்துள்ளார்.
இந்நிலையில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டுள்ளார். 3 நிமிடங்கள் 57.42 வினாடிகளில் அவர் போட்டியை நிறைவுசெய்துள்ளார்.
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் இலங்கையர் ஒருவர் வெற்றிக்கொண்ட முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.








