கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் , துறைமுகங்கள் மற்றும் விமானப் சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா ஆகியோர் தலைமையில் கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உயர்ந்தபட்ச பாதுகாப்பை பேணுவதன் முக்கியத்துவம் ,தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச இணைப்பில் முக்கிய பங்களிப்பு குறித்து பாதுகாப்புச் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பயணிகள், விமான பணிக்குழாமினர், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அனைத்து தனிநபர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுயுள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு தற்போதுள்ள தடுப்பு வழிமுறைகளை மேம்படுத்துவது குறித்தும் அதன்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.








