ரஷ்யாவின் இரண்டு பாரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
யுக்ரேனுக்கெதிரான ரஷ்யா முன்னெடுத்துவரும் போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை, அந்நாட்டு எரிசக்தி துறைமீதான அழுத்தத்தை அதிகரிக்கும்.
இது ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பலவீனத்தை ஏற்படுத்துமென அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா தொடர்ந்தும் ராஜதந்திர தீர்வை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது.
நிரந்தர அமைதி ரஷ்யாவின் நல்லெண்ண பேச்சுவார்த்தையை பொறுத்ததென அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.








