சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் பல இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டைக்கும், கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கு செல்லும் பல ரயில்கள் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதற்கமைய அதிகாலை 4.30 க்கு இடம்பெறும் கண்டி – கொழும்பு கோட்டைக்கான ரயில் சேவை,
காலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் கண்டி – கொழும்பு ரயில் சேவை,
காலை 5.55 க்கு ஆரம்பமாகும் கொழும்பு கோட்டை – பதுளைக்கான ரயில் சேவை
காலை 6.15 க்கு இடம்பெறும் கண்டி – கொழும்பு கோட்டைக்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கண்டியில் இருந்து பதுளைக்கு முற்பகல் 11.15 மணிக்கும் , மதியம் 12.35 மணிக்கும் இரண்டு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.








