அரசாங்கத்தின் கனவு இலக்கு திட்டத்தின்கீழ் மருதானை ரயில் நிலைய மீள்புனரமைப்பு பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பிலுள்ள இரண்டாவது பாரிய ரயில் நிலையமாக மருதானை ரயில் நிலையம், நாட்டின் முக்கிய பாரம்பரிய இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது கடந்த 1889ம் நிரந்தர ஆண்டு மரத்துண்டுகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. அதன்பின்னர் 1893ம் ஆண்டு தற்போதுள்ள கட்டிடம் நிரந்தர கட்டிடமாக அமைக்கப்பட்டது.
அதனையடுத்து பிரிட்டிஷ் பாணியில் கட்டிடக்கலைஞர் சாலி மரியகர் வடிவமைத்த தற்போதைய ரயில் நிலைய கட்டிடம், 1908ம் ஆண்டு திறக்கப்பட்டது.
தற்போது தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் மாத்திரம் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மீள்புனரமைப்பு பணிகளுக்கு தனியார் துறையின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
ரயில் நிலையத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன.









