2026ம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பான நேர மற்றும் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை , 2026ம் ஆண்டு பெப்ரவரி 17ம் திகதி முதல் பெப்ரவரி 26ம் திகதி வரை நடைபெறும்.
2026ம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை, அடுத்த ஆண்டு ஒகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05ம் திகதி வரை நடைபெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, 2026ம் ஒகஸ்ட் 09ம் திகதி நடைபெறும்.
பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை 2026 ஒக்டோபர் 24ம் திகதி இடம்பெறும்.
இதேவேளை 2026ம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை, அடுத்த ஆண்டு டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும்.
இதற்கமைய பாடசாலை விடுமுறை உரிய காலப்பகுதியில் வழங்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.









